அரசாங்க அதிகாரிகளை கதிகலங்க வைக்கும் ஜனாதிபதி கோட்டாபய

Report Print Vethu Vethu in அரசியல்

அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ள பிரதானிகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேரடி கண்காணிப்புகளை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்க நிறுவனங்களுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதற்காக 6 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதில் தகுதியான மூவரின் பெயர் ஜனாதிபதி செயலகத்திற்கு பரிந்துரைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நிறுவனங்கள், சட்டமன்ற வாரியங்களுக்கு நியமிக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் இயக்குநர்களின் பெயர்கள் தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதியின் நேரடி மேற்பார்வைக்கு உட்படுத்தப்படும்.

அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் நியமனம் செய்வதற்கான தகுதிகள், தேவைப்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதியால் முடிவு செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் காரணமாக அரசாங்க அதிகாரிகள் கடும் கலக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.