மக்கள் ஆணையை கவனத்தில் கொள்ளாததே தோல்விக்கு காரணம்! சம்பிக்க ரணவக்க

Report Print Steephen Steephen in அரசியல்

மக்களின் நிலைப்பாடுகளை கவனத்தில் கொள்ளாது செயற்பட்டதன் பிரதிபலனாகவே தமது அரசாங்கம் தோல்வியடைய நேரிட்டது என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஹோமாகமை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் எமக்கு வழங்கப்பட்ட மக்களின் ஆணைக்கு அமைய செயற்படவில்லை. எமக்கு வாக்களித்த படித்த மக்கள் ராஜபக்ச அரசாங்கம் அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொண்ட மிகப் பெரிய தேசிய கொள்ளையடிப்புகளுக்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்த்தனர்.

எனினும் எமது பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சரும், நீதியமைச்சரும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. தற்போது எப்படி வேகமாக இந்த வேலைகள் நடக்கின்றன என்பதை காணக் கூடியதாக இருக்கின்றது.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டோ நாங்கள் தோல்வியடைந்தோம்.

2015ம் ஆண்டு எமக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணை மறந்து செயற்பட்டது மற்றும் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு தெளிவாக தண்டனை வழங்காமை ஆகியனவே இதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.