எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை அபிவிருத்தித் திட்டங்கள் இடைநிறுத்தம்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் வரை நாட்டில் வீதிகள், கட்டடங்கள் நிர்மாணப் பணிகள் உள்ளிட்ட மிக பெரிய அபிவிருத்தித் திட்டங்களை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதியமைச்சின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் புதிய அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் வரை எந்த திட்டங்களுக்கும் நிதிகளை ஒதுக்குவதில்லை என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் பாடசாலை, வைத்தியசாலைகள், வீதிகள் உட்பட ஏனைய பொது கட்டடங்கள் என்பவற்றின் நிர்மாண பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பெறுமதி சேர் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி என்பவற்றை குறைத்துள்ளதால் அரச வருமானம் குறைந்துள்ளதாகவும், இதனால் பிரதான அபிவிருத்தி திட்டங்களுக்கு செலவிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.