கசப்பான உண்மைகளை பேசும் ரஞ்சன் ராமநாயக்கவின் கைது அரசாங்கத்தின் தந்திரமே!

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கம் வழங்கிய துப்பாக்கியின் அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கசப்பான உண்மைகளை பேசும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் முழு நாடும் நேசிக்கும் நடிகர் என்ற வகையிலும் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்ய வேண்டும் என்பது 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பு அல்ல.

பாரியளவில் அதிகரித்துள்ள காய்கறி விலைகளை மக்கள் மறந்து போக வேண்டும் என்பதற்காக அரசாங்கம் பயன்படுத்தும் தந்திரமாக இதனை அடையாளம் காண முடியும். கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு இரண்டாம் தரத்திற்கு விழுவார் என்று நான் நம்பவில்லை.

வீடுகளில் இருக்கும் மடிக் கணனிகளை தரையில் அடித்து உடைத்து போடுங்கள். சீடி தகடுகள் இருந்தால் அவற்றை உடைத்து போடுங்கள் என்று மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் எவரும் கைது செய்யப்படலாம் எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.