நிறைவேற்று அதிகாரத்தை கொள்ளையடிக்கும் பிரதமர் - விமல் வீரவங்ச

Report Print Steephen Steephen in அரசியல்

19ஆவது அரசியலமைப்பு் திருத்தச் சட்டம் ஊடாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை பிரதமர் கொள்ளையிடும் நிலைமை உருவாகி இருப்பதாகவும், இந்த திரிபு நிலைமை தொடர்ந்தும் வைத்துக்கொண்டு முன்நோக்கி செல்ல முடியாது எனவும் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்படுவது அவசியம் என நாங்கள் நினைக்கின்றோம். அது புதிய அரசியலமைப்புச் சட்டமாக இருக்கலாம் அல்லது அரசியலமைப்பு மறுசீரமைப்பாக இருக்கலாம்.

ஜனாதிபதியின் கையில் நிறைவேற்று அதிகாரத்தை வழங்குகின்றனர். எனினும், நாடாளுமன்றம் அந்த அதிகாரத்தில் ஒரு பகுதியை கொள்ளையிடுகிறது.

கடந்த அரசாங்கத்தின் அரசியலமைப்புத் திருத்தச் சட்டங்களின் மூலம் நடந்துள்ளது உண்மையில் நாடாளுமன்றம் அதிகார மையமல்ல. பிரதமரே அதிகார மையம். இந்த திரிபு நிலைமையை தெடர்ந்தும் வைத்துக்கொண்டு முன்நோக்கி செல்ல முடியாது எனவும் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.