ரஞ்சனின் கைது பலனளிக்காத அர்த்தமில்லாத நடவடிக்கையே! சரத் ஏக்கநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்தது பலனளிக்காத செயல் என மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்தது அர்த்தமில்லாத நடவடிக்கையாகவே நான் பார்க்கின்றேன். குற்றம் செய்தவர்கள் இருந்தால் தண்டனை வழங்க வேண்டும்.

அதற்கு கட்சி, இன, குல பேதங்கள் இல்லை. ஆனால் தற்போது நடப்பது முற்றிலும் மாறுபாட்ட நடவடிக்கைகள்.

நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துகின்றனர். விளக்கமறியலில் வைக்கின்றனர். மறுநாள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். நோயாளர்காவு வண்டியில் வருகின்றனர்.

ஒரு வாரத்திற்கு பின்னர் எதுவும் இன்றி வீடுகளுக்கு செல்கின்றனர். இது சரியானதா என்று எனக்கு தெரியாது. ஆனால் நாங்கள் சட்டத்தை மதிக்க வேண்டும் எனவும் சரத் ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.