ரஞ்சனின் வீட்டில் கைப்பற்றிய காணொளிகளால் பீதியில் அரசியல்வாதிகள் உட்பட முக்கியஸ்தர்கள் !

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் பொலிஸார் கைப்பற்றிய ஆபாச காணொளிகளில், இணையத்தளத்தில் சர்ச்சைக்குரிய காணொளிகளை வெளியிட்டு வந்த பெண்ணொருவர் வழங்கியதாக கூறப்படும் சில காணொளிகள் இருப்பதாக கேள்வியுற்றதை அடுத்து, பல்வேறு துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலர் கடும் பீதியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷர்மி குமார் என்றழைக்கப்படும் பெண்ணொருவரின் சில காணொளிகளை நேற்றைய தினம் ரஞ்சனின் வீட்டில் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பெண் கைது செய்யப்பட்ட பின்னர் அவருக்கு நெருக்கமான ஒருவர், ஷர்மி குமார் நடத்திய அழகு நிலையத்திற்கு வந்து சென்ற பிரபல அரசியல்வாதிகள், பாதுகாப்பு தரப்பின் பிரதானிகள், வர்த்தகர்கள், அரச உயர் அதிகாரிகள் மட்டுமல்லாது பிரபல ஊடகவியலாளர்கள் ஆகியோர் அழகிய பெண்களுடன் காணப்படும் காணொளிகளை ரஞ்சன் ராமநாயக்கவிடம் வழங்கியுள்ளார்.

பாலியல் தொழில் நிலையத்தை நடத்தியமை மற்றும் அந்த தொழிலில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டில் ஷர்மி குமாரை வலானை மோசடி தடுப்பு பிரிவு பொலிஸார் அண்மையில் கைது செய்தனர்.

வத்தளை பிரதேசத்தில் அழகு நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் நிலையத்தை நடத்தி வந்துள்ளதுடன், இளம் பெண்கள் ஒரு மணி நேரத்திற்கு 30 ஆயிரம் ரூபாவுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.