ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் பிணையில் விடுதலை!

Report Print Kanmani in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரின் மாதிவல இல்லத்தில் இருந்து 2016ஆம் ஆண்டிலிருந்து அனுமதிப்பதிரம், புதுப்பிக்காத கைத் துப்பாக்கி, 127 தோட்டாக்கள், இரண்டு கணினிகள், சந்தேகத்திற்கு இடமான சில ஆவணங்கள், இருவெட்டுக்கள் என்பனவற்றினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.