சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் மைத்திரி தலைமையில் பேச்சுவார்த்தை

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் அனைவரும் எதிர்வரும் ஏழாம் திகதி பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட விதம் மட்டுமல்லாது மேலும் பல முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers

loading...