ரணிலிடம் பட்ட கடன்களை நான் அடைத்து விட்டேன்! சஜித்

Report Print Jeslin Jeslin in அரசியல்
746Shares

நான் எந்த தினத்திலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு பின்னால் சென்று கத்தியால் குத்துகின்ற பாணியில் அரசியல் மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும், ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது அரசியல் கடன்களை செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் மூத்த உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனது தந்தை ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிரான குற்றச்சாட்டு தீர்மானத்தின் போது ரணில் விக்ரமசிங்க ஆற்றிய முக்கிய பங்கை ஒருபோதும் மறக்கவில்லை.

இதற்கமைய நான் எந்த தினத்திலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு பின்னால் சென்று கத்தியால் குத்துகின்ற பாணியில் அரசியல் மேற்கொள்ளவில்லை.

விசேடமாக கடந்த ஆட்சிக்காலத்தில் ரணில் விக்ரமசிங்கவை நீக்கி பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி 66 தடவைகளுக்கு மேல் தன்னிடம் வேண்டுகோள் விடுத்த நிலையில் அதை நிராகரித்ததனால் ரணில் விக்ரமசிங்கவிற்கு பட்ட தனது அரசியல் கடன்களை செலுத்தி முடித்துள்ளேன் எனவும் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.