ரஞ்சன் ராமநாயக்கவின் இரகசிய தொலைபேசி உரையாடல்கள் வெளியாகியுள்ளன!

Report Print Kanmani in அரசியல்
311Shares

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் சி.ஐ.டி. மூத்த அதிகாரிகளுக்கு இடையிலான தொலைபேசி உரையாடல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக நீதித்துறை மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு ரஞ்சன் ராமநாயக்க அழுத்தம் கொடுத்ததாக குறித்த உரையாடல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த உரையாடல்கள் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டு சில மணிநேரங்களில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த தொலைபேசி உரையாடல்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினரின் மாதிவல இல்லத்தில் இருந்து 2016ம் ஆண்டிலிருந்து அனுமதிப்பத்திரம் புதுப்பிக்காத கைத்துப்பாக்கி, 127 தோட்டாக்கள், இரண்டு கணினிகள், சந்தேகத்திற்கு இடமான சில ஆவணங்கள், இறுவட்டுக்கள் என்பனவற்றினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.