நிதி மோசடிகளுக்கு எதிரான பொலிஸ் பிரிவை கலைப்பதற்கான அனுமதி இடை நிறுத்தம்

Report Print Ajith Ajith in அரசியல்
41Shares

நிதி மோசடிகளுக்கு எதிரான பொலிஸ் பிரிவை கலைப்பதற்கான அனுமதியை அமைச்சரவை நிறுத்தி வைத்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை இந்த தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இந்தப்பிரிவே ராஜபக்சர்களுக்கு எதிரான நிதி மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து வந்தது. இந்த நிலையில் அதனை கலைத்துவிடுமாறு அப்போதிருந்தே கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இந்தப்பிரிவை கலைக்கவேண்டும் என்றுக்கோரி உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையை கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது சில அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனையடுத்தே தீர்ப்பு வரும் வரை அந்தப்பிரிவை கலைக்கும் அமைச்சரவை தீர்மானத்தை நிறுத்தி வைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.