எரிபொருள் விலை சூத்திரம் மீண்டும் கொண்டுவரப்படுமா? வெளியாகியுள்ள தகவல்

Report Print Sujitha Sri in அரசியல்

கடந்த அரசாங்க காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரமானது மீண்டும் கொண்டுவரப்பட மாட்டாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் திட்டங்கள் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்றைய தினம் பதிவொன்றை இட்டுள்ளார்.

அந்த பதிவில்,

கடந்த அரசாங்க காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருளுக்கான விலை சூத்திரமானது கோட்டாபயவினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட மாட்டாது.

அத்துடன் இது தொடர்பில் புதிய சூத்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட மாட்டாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் எரிபொருள் விலை சூத்திரம் மீண்டும் கொண்டு வரப்படும் என்ற செய்திகள் வெளியாகி வந்தமை குறிப்பிடத்தக்கது