பொது மக்களுக்காக ஜனாதிபதி கோட்டாபய வழங்க தயாராகும் சலுகைகள்!

Report Print Vethu Vethu in அரசியல்
2686Shares

பொது மக்களுக்காக பல்வேறு சலுகைகளை வழங்குவதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டுள்ளார்.

வீடு, சிறிய வர்த்தகம் அல்லது நிர்மாணிப்பு திட்டமிடல்களை உரிய முறையில் மேற்கொண்டிருந்தால் அதற்கான அனுமதியை ஒரே நாளில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நிர்மாணிப்பிற்கான திட்டமிடல்களை அனுமதிக்கும் போது காணப்படும் சட்டத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நீண்ட காலம் எடுப்பதால் பொது மக்கள் கடும் சிரமங்களுக்குவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே காணப்படும் சட்டத்திட்டங்களை இலகுப்படுத்தி மக்கள் முகம் கொடுக்கும் சிரமங்களுக்கு கூடிய விரைவில் தீர்வு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முதல் முறையாக வீடு ஒன்றை கொள்வனவு செய்யும் நபருக்கு நீண்ட கால கடன் மற்றும் நிவாரண வட்டி முறையில் கடன் வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்துவது முக்கியம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது ஜனாதிபதி இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.