ரஞ்சன் ராமநாயக்க பற்றிய உளவு தகவலை வழங்கிய அவரது நண்பர்

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அவருக்கு வரும் அனைத்து தொலைபேசி அழைப்புகளை பதிவு செய்வார் எனவும் தொலைபேசியின் களஞ்சிய செயலி நிரம்பியதும் அவற்றை சீடிக்களில் பதிவு செய்து வைப்பார் எனவும் அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவரே அரசாங்கத்தின் அரசியல்வாதி ஒருவருக்கு தகவல் வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலஞ்ச ஆணைக்குழுவிற்கு நேற்று சென்றிருந்த போது, செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க தனது அனைத்து தொலைபேசி உரையாடல்களும் தானாக பதிவு செய்யும் செயலி ஒன்றை தனது செல்போனில் வைத்திருப்பதாகவும் அவர் தனது எதிரணியினருக்கு எதிராக செயற்பட்டமை, நீதிபதிகள், பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தமை என்பன சிறப்பாக பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ராமநாயக்கவை கைது செய்யும் நடவடிக்கைகளில் அரசாங்கம் விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையில் பொலிஸாரே நடந்துக்கொண்டனர். தேடுதல் நடத்த நீதிமன்ற அனுமதியை பெற்றிருந்த பொலிஸார் சரியான முறையில் தகவல்களை வெளியிடாததே இதற்கு காரணம்.

எவ்வாறாயினும் தற்போது சாட்சியங்களுடன் அனைத்து தகவல்களும் சிக்கியுள்ளன. இதனால், இம்முறை ரஞ்சன் மாத்திரமல்ல அவருக்கு மேல் இருக்கும் நபர்களும் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.