இலங்கை வரும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் Sergey Lavrov இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 14 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு விஜயம் செய்யும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளதுடன். இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகளுடன் 30 ஆண்டுகள் நடத்திய போர் தொடர்பிலான புதிய விடயங்களை முன்வைக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறான பின்னணியிலேயே ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ரஷ்ய அமைச்சரும் இலங்கை தலைவர்களும் கலந்துரையாடுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.