மக்களின் எதிர்ப்பால் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய வடிவேல் சுரேஷ்

Report Print Steephen Steephen in அரசியல்

பதுளை, மடுல்சீமை பிரதேசத்தில் நடந்த பேருந்து விபத்தில் கொல்லப்பட்டவர்களின் நீதவான் விசாரணைகள் பசறை மாவட்ட வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற போது, முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் அங்கு சென்றதை அடுத்து அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

பழுதடைந்த பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதால் இப்படியான விபத்துக்கள் ஏற்படுவதாகவும் புதிய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த போவதாக வடிவேல் சுரேஷ் மக்களிடம் கூறியதை அடுத்து, ஆத்திரமடைந்த மக்கள், அவரை அங்கிருந்து செல்லுமாறு சத்தமிட்டு கோஷமிட்டுள்ளனர்.

அதிகாரத்தில் இருந்து காலத்தில் எதனையும் செய்யாது, மக்கள் சோகமாக இருக்கும் நேரத்தில் வந்து மக்களின் துன்ப, துயரங்கள் பற்றி விசாரிப்பதற்கு பதிலாக அரசியல் பேசுவதாக கூறி மக்கள் சத்தமிட்டு, தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

பொலிஸார் தலையிட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனையடுத்து வடிவேல் சுரேஷ் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி செல்ல பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.