விஜேதாச ராஜபக்சவின் கருத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளக் கூடாது!

Report Print Gokulan Gokulan in அரசியல்

சிறுபான்மை விகிதாசார பிரநிதித்துவத்தினை மாற்ற ஜனாதிபதி ஒரு போதும் இடமளிக்க கூடாது என அருணலு மக்கள் முன்னணயின் தலைவர் வைத்தியர் கே.ஆர்.கிசான் தெரிவித்துள்ளார்.

இன்று டிக்கோயா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இதுவரை காலம் இருந்து வந்த சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் 5 ஆக இருந்ததனை தற்போது விஜேதாச ராஜபக்ச அதனை 12.5 ஆக உயர்த்த வேண்டும் என யாப்பு திருத்தம் ஒன்றினை கொண்டு வர முயற்சி செய்து வருகிறார். அதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஒரு போதும் இடமளிக்கக் கூடாது.

இந்த நாட்டில் தமிழ், சிங்களம், முஸ்லிம் அனைத்து இன மக்களும் மிக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் கோட்டபாய ராஜபக்சவின் வெற்றிக்காக வாக்களித்திருக்கிறார்கள்.

அதேநேரம் அவர் ஜனாதிபதி ஆன பின் அவருடைய செயற்பாடுகளை அவதானித்து சிறுபான்மை மக்கள் அவரை நெருங்கி வருகின்ற நிலையில் சிறுபான்மை மக்களுக்கு பாதகமான ஒரு செயல் நிறைவேறினால் மீண்டும் மக்கள் அவரை வெறுக்க நேரிடும்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட அதிகார போட்டிகள் காரணமாக இந்த நாட்டில் சுமார் 30 வருட யுத்தம் நடைபெற்றது. அந்த யுத்தத்தின் பிரதிபலன்கள் தொடர்பாக இன்றும் ஜெனிவா மாநாட்டில் பேசப்பட்ட வருகின்றது.

இந்நிலை மீண்டும் இவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் பாதகமான சூழ்நிலையினையே ஏற்படுத்தும்.

அதேநேரம் நாட்டை சுதந்திரமடைய செய்வதற்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் அனைவரும் இணைந்துதான் செயற்பட்டுள்ளார்கள். ஆகவே விஜேதாச ராஜபக்ச என்பவர் இன்று ஒரு கட்சியிலும் நாளை வேறு கட்சியிலும் இருப்பார்.

அவ்வாறானவர்களை மக்கள் புறக்கணித்து வருகின்ற நிலையில் இவருடை சிபாரிசுகளை கொண்டு வருவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சரியான தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் மக்களின் அபிலாசைகளை அறிந்து சிறுபான்மை கட்சிகளின் விருப்பத்துடன் நிறைவேற்றுவதன் மூலம் உண்மையான ஜனநாயகம் உருவாகும்.

அவ்வாறு இல்லாது தன்னிச்சையாக முடிவு எடுத்தால் பிற்காலத்தில் அது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் இந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பல சிறுபான்மை கட்சிகள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுடன் இணைந்திருந்ததனால் இதனை ஒரு போதும் கொண்டு வரக்கூடாது என அவர் கூறியுள்ளார்.

Latest Offers

loading...