டொப் 10 திருடர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள மகிந்தானந்த

Report Print Steephen Steephen in அரசியல்

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மிகப் பெரிய ஊழல், மோசடிகளில் ஈடுபட்டதாக கூறப்படும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்காக ராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தலைமையில் விசேட குழு செயற்பட்டு வருவதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குழு அந்த காலத்தில் கூட்டு எதிர்க்கட்சியினர், நல்லாட்சி அரசாங்கத்தின் டொப் 10 திருடர்கள் என அடையாளப்படுத்திய அமைச்சர்களுக்கு எதிராக முதலில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கத்தின் 10 அமைச்சர்களுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி இலஞ்ச ஆணைக்குழு மற்றும் குற்றவியல் விசாரணை திணைக்களம் ஆகியவற்றில் முறைப்பாடுகளை செய்திருந்தது. இதில் முன்னிலை வகித்து செயற்பட்டவர் மகிந்தானந்த அளுத்கமகே.

தற்போது நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள குழுவில் பிரசன்ன ரணதுங்க, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரன, ஷெயான் சேமசிங்க, காஞ்சன விஜேசேகர ஆகியோரும் அங்கம் வகிப்பதாக தெரியவருகிறது.

மகிந்தானந்த அளுத்கமகே, நல்லாட்சி அரசாங்கத்தின் டொப் 10 திருடர்கள் என்ற பெயரில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி கொழும்பில் புத்தகம் ஒன்றையும் வெளியிட்டார். அந்த புத்தகத்தின் முதல் பிரதியை மகிந்த ராஜபக்ச பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.