மஹிந்தானந்தவை கொலை செய்ய சதித்திட்டம்?

Report Print Kamel Kamel in அரசியல்

அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை படுகொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்தவை கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டியமை தொடர்பான தகவல்கள் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு ஒன்றில் அம்பலமாகியிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

சிங்களே தேசிய அமைப்பின் ஊடக சந்திப்பில் இன்றைய தினம் இந்த விடயங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மடில்லே பஞ்ஞாலோக தேரர் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் குறித்து இன்று நாடாளுமன்றில் ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார ஆகியோர் விவாதம் செய்து கொண்டனர்.