சீஐடியின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர பதவியிலிருந்து இடைநிறுத்தம்

Report Print Ajith Ajith in அரசியல்

சீஐடியின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் பதவியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையிலேயே அவர் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக கைத்துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் கைது செய்யப்பட்டார்.

இதன்போது அவரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட குரல் பதிவுகள் மூலம் உயர் பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்ற நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்தியமை தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.