ஷானி அபேசேகர வெளிநாடு செல்ல தடை

Report Print Steephen Steephen in அரசியல்

குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர வெளிநாடு செல்ல தடை விதித்து நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விடுத்த கோரிக்கையை ஆராய்ந்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் சம்பந்தமான குரல் பதிவுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இந்த கோரிக்கையை விடுத்திருந்தனர்.

Latest Offers

loading...