முன்னாள் அரசாங்கத்திற்கு எதிரான முறைப்பாடுகளை இலஞ்ச ஆணைக்குழு விசாரிக்கவில்லை: அளுத்கமகே

Report Print Steephen Steephen in அரசியல்

அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை சம்பந்தமாக கடந்த அரசாங்கத்திற்கு எதிராக செய்த முறைப்பாடுகள் எதனையும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரிக்கவில்லை என ராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

13 ராஜாங்க அமைச்சர்கள் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு சென்றிருந்த போது செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கம் ஆயிரத்து 500 பில்லியன் ரூபாய் அரச பணத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தி கடந்த 2016 ஆம் ஆண்டு செய்த முறைப்பாடுகள் தொடர்பாக துரிதமாக விசாரணை நடத்துமாறு 13 ராஜாங்க அமைச்சர்கள் இன்று ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.