நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கப்படும் - மரிக்கார்

Report Print Kamel Kamel in அரசியல்

நாட்டின் அபிவிருத்தியை கருத்திற் கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

நாட்டின் அபிவிருத்திக்காக உணர்வுபூர்வ அடிப்படையில் அல்லாது ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களுக்கு பூரண ஆதரவளிக்கப்படும்.

அரசியல்வாதி அல்லாத ஒருவர் என்பதனால் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவிற்கு கடுமையான தீர்மானங்கள் எடுக்கும் ஆற்றல் உண்டு.

எவ்வாறெனினும், நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் ஆதரிக்கப் போவதில்லை.

இதன்படி, 19ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கு ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கப்படாது என மரிக்கார் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...