சாரதியொருவரின் மூலமே ரஞ்சனின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு இறுவட்டுக்கள் கசிந்தன! மஹிந்தானந்த அலுத்கமகே

Report Print Ajith Ajith in அரசியல்

ரஞ்சன் ராமநாயக்கவிடம் சர்ச்சைக்குரிய குரல்பதிவு இறுவட்டுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பல தரப்பிலும் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த உண்மை முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் மூலமே கசிந்ததாகவும், இறுவட்டுக்களின் மூலமே ரஞ்சன் ராமநாயக்க வைத்திருந்த சர்ச்சைக்குரிய குரல்கள் வெளியானதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஒரு நாள் மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் அமைந்திருக்கும் இடத்தில் இருந்து ஒருவர் முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.

சிறிது நேரம் பயணித்த நேரம் அவரை ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் மாதிவெலைக்கு திரும்பி வருமாறு கேட்டுள்ளார். இதனையடுத்து முச்சக்கர வண்டியும் மாதிவெலைக்கு திருப்பப்பட்டுள்ளது.

இதன் பின்னர் குறித்த முச்சக்கர வண்டி சாரதியிடம் மற்றும் ஒருவர் வாடகை பயணத்தைக்கோர அவரை ஏற்றிச்சென்றுள்ளார்.

இதன்போது குறித்த நபர் முச்சக்கர வண்டியின் பின் பகுதியில் இறுவட்டுக்கள் அடங்கிய பொதி ஒன்று இருப்பதைக் கண்டு முச்சக்கர வண்டி சாரதியிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து முச்சக்கரவண்டியின் சாரதி மாதிவெலக்கு சென்று இறுவட்டுக்கள் அடங்கிய பொதியை கையளித்துள்ளார்.எனினும் அதில் ஒன்றை அவர் தம்வசம் வைத்துக்கொண்டார்.

இதனை தவிர பொலிஸாரின் தேடுதலின் போது கைப்பற்றிய இறுவட்டுக்களே ஊடகத்துறையினர் கைகளுக்கு சென்றது என்ற தகவலை அவர் மறுத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...