ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரை நாடாளுமன்றக்குழுவே தெரிவு செய்யும்! கயந்த கருணாதிலக்க

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரை கட்சியின் நாடாளுமன்றக்குழு தெரிவு செய்யும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இன்று தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இந்த விடயத்தில் நாடாளுமன்றக்குழு இறுதி முடிவை எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கட்சியில் உள்ள சிலர் தலைவராக தெரிவு செய்யப்படுகின்றவர். பெரும்பான்மை சமூகத்தின் நம்பிக்கையை வெற்றிக்கொள்பவராக இருக்கவேண்டும் என்று சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சிலர் நடுத்தர மக்களை கவரும் ஒருவரே தலைவராக வரவேண்டுமென்றும் எண்ணம் கொண்டுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.