ஜெனிவா யோசனையின் மூன்று கோரிக்கைகளை நிராகரித்த ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கைக்கு எதிராக போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜெனிவா யோசனையின் மூன்று கோரிக்கைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், காணாமல் போனோர் தொடர்பான சட்டத்தை மீண்டும் ஆராய்ந்து அதனை நீக்க நடவடிக்கை எடுப்பது, பாதுகாப்பு படைகளை மறுசீரமைப்பது ஆகிய விடயங்களையே ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

இந்த ஜெனிவா யோசனை எதிர்வரும் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை பேரவையின் மாநாட்டில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

அதற்கு முன்னதாக அரசாங்கம் இந்த யோசனைக்கு இணை அனுசரணை வழங்குவதில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது.

Latest Offers

loading...