இலங்கை வெளிவிவகார அமைச்சர் இந்தியாவில்

Report Print Steephen Steephen in அரசியல்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவுக்கு சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று புதுடெல்லியில் இந்திய வெளிவிவகார செயலாளர் விஜய கோக்லேவை சந்தித்துள்ளார்.

இலங்கை மற்றும் இந்தியா நாடுகளுக்கு இடையிலான முக்கிய விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பில் இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்னாண்டோ, இலங்கைக்காக இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து ஆகியோரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

வெளிவிவகார அமைச்சராக பதவியேற்ற தினேஷ் குணவர்தனவுக்கு இது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமாகும் என்பதுடன் நாளைய தினம் அவர் இலங்கை திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers