விஜயதாசவின் திருத்தச் சட்டங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டங்கள், அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் அல்ல என உறுதியாகியுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான முதல் சந்திப்பில் இது தெரியவந்துள்ளது.

சந்திப்பில் கலந்துக்கொண்ட பத்திரிகை ஆசிரியர்கள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் விஜயதாச ராஜபக்ச கொண்டு வந்துள்ள அரசியலமைப்புத் திருத்தச் சட்டங்கள் குறித்து வினவியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்த அமைச்சர்கள், அரசாங்கத்திற்குள் அப்படியான நிலைப்பாடுகள் இல்லை எனவும் அவசரமாக அரசியலமைப்புத் திருத்தங்களை முன்வைக்க முடியாது எனவும் மக்கள் மத்தியில் விவாதங்களை ஏற்படுத்திய அது குறித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் குறைக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மீண்டும் அவருக்கு பெற்றுக்கொடுக்கும் திருத்தங்களை கொண்ட அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் உட்பட இரண்டு திருத்திச் சட்டங்களை விஜேதாச ராஜபக்ச அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

Latest Offers

loading...