சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளை ரஞ்சன் ராமநாயக்க தம்வசம் வைத்திருந்தமையானது சட்டரீதியற்ற செயல்!

Report Print Ajith Ajith in அரசியல்

சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளை ரஞ்சன் ராமநாயக்க தம்வசம் வைத்திருந்தமையானது சட்டரீதியற்ற செயலாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னைய அரசாங்கம் ஆட்சியில் இருந்த காலத்தில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும், பாரிய குற்றங்களை எதிர்நோக்கியவர்களின் வழக்குகளை விசாரணை செய்த நீதிபதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்களும், ஏனையோருடன் இடம்பெற்ற உரையாடல்களும் அடங்கிய குரல் பதிவுகளே ரஞ்சனிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில் ரஞ்சனின் செயலை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...