இலங்கையிடம் இந்தியா விடுத்துள்ள கோரிக்கை!

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் பிடியில் உள்ள தமது நாட்டு கடற்றொழிலாளர்களின் படகுகளை விடுவிக்குமாறு இந்தியா இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவுக்கு சென்றுள்ள இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவிடம் இன்று இந்தக்கோரிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் விடுத்துள்ளார்.

இந்தக்கோரிக்கை தொடர்பில் கருத்துரைத்த இலங்கையின் அமைச்சர்,

ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அளித்த உறுதிமொழிக்கு இணங்க குறித்த படகுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் இலங்கையின் அமைச்சர் இந்திய வெளியுறவு செயலர் விஜே கேசவ்வுடனும் தனியான சந்திப்பை நடத்தினார்.

இலங்கையில் தற்போது இந்திய கடற்றொழிலாளர்களின் 52 படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இதனை தவிர 15 கடற்றொழிலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Latest Offers

loading...