அதிஸ்டவசமாக ரஞ்சனுக்கு தொலைபேசியில் வாழ்த்து மட்டுமே கூறியுள்ளேன்! பிரதமர்

Report Print Ajith Ajith in அரசியல்

நீதித்துறையில் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுக்கள் தொடர்பில் பிரதம நீதியரசர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று ஊடக சந்திப்பை மேற்கொண்ட போதே மஹிந்த ராஜபக்ச இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

பிரதம நீதியரசர் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கையை எடுப்பார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

புதிய அரசாங்கம் பதவியேற்று இரண்டு மாதங்களுக்குள் முன்னைய அரசாங்கத்தின் பல முறைகேடுகளை கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

இதன்மூலம் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் நீதித்துறை, அரசாங்கத்தின் கீழ் கட்டுப்பட்டிருந்த நிலையை காண முடிந்திருக்கிறது.

வாகன முறைகேடு தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச சிறையில் அடைக்கப்பட்டார்.

எனினும் அதனை விட மோசமான முறைகேடுகள் மத்திய கலாச்சார நிதியம் மற்றும் மஹபொல நிதியத்தில் இடம்பெற்றுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி கலந்துரையாடல்களில் ஈடுபட்டீர்களா என இதன்போது பிரதமரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது, அதிஸ்டவசமாக தாம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து மாத்திரமே கூறியுள்ளதாக பதிலளித்துள்ளார்.