இலங்கை வரும் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர்

Report Print Steephen Steephen in அரசியல்

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ஹெலிஸ் வேல்ஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வரவுள்ளார்.

வேலஸ் எதிர்வரும் 13ஆம், 14ஆம் ஆகிய திகதிகளில் இலங்கையில் அவர் தங்கியிருப்பார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை வரும் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர், இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.