பகிடிவதைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - பந்துல குணவர்தன

Report Print Kamel Kamel in அரசியல்

பகிடிவதைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களிற்குள் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான ஒழுங்குகள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பகிடி வதைக்கு உள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கொழும்பு பல்கலைக்கழக மாணவரையும் அமைச்சர் பார்வையிட்டு நலம் விசாரித்துள்ளார்.