ரஞ்சனின் சகல குரல் பதிவுகளையும் பகிரங்கப்படுத்தினால் மக்களுக்கு உண்மை புரியும்

Report Print Steephen Steephen in அரசியல்

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்களில் தமக்கு சாதகமான பகுதிகளை மாத்திரம் தெரிவு செய்து பகிரங்கப்படுத்துவதற்கு பதிலாக அனைத்து குரல் பதிவுகளை பகிரங்கப்படுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அனைத்து குரல் பதிவுகளையும் பகிரங்கப்படுதுங்கள். தெரிவு செய்து, தமக்கு சாதகமானவைற்றை மாத்திரம் வெளியிடாமல் அனைத்தையும் வெளியிடுங்கள். அப்போது இந்த அரசியல் முறையில் இருக்கும் அசிங்கத்தை மக்கள் புரிந்துக்கொள்ள முடியும்.

அதேபோல் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை மட்டுமல்ல இப்படி நீதிமன்றத்திற்கு, சட்டத்திற்கு, ஜனாதிபதிக்கு, பிரதமருக்கு அழுத்தங்கள் அல்லது கோரிக்கை விடுத்த குரல் பதிவுகளையும் வெளியிடுங்கள். இவர்கள் உண்மையில் என்ன செய்தார்கள் என்பது மக்கள் புரிந்துக்கொள்ள முடியுமாயின் நேரம் பெறுமதியாக இருக்கும்.

ஒரு அணியினர் நடந்த இந்த சம்பவத்துடன் மக்கள் விடுதலை முன்னணியை கோர்த்து விட முயற்சித்து வருகிறது. நாங்கள் தப்பிக்க எங்களுக்கு எந்த வழக்குகளும் இல்லை.

நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளும் வர்த்தகங்கள் எதுவுமில்லை. அரசாங்கத்தின் உதவியுடன் சிங்கப்பூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தேவையுமில்லை. இதனால், எந்த குரல் பதிவுக்கும் நாங்கள் பயமில்லை.

கடந்த காலத்தில் இலஞ்ச ஆணைக்குழு, குற்றவியல் விசாரணை திணைக்களம், நிதி மோசடி விசாரணைப் பிரிவு என்பன வழக்கு தொடர்ந்த நபர்களின் தொலைபேசிகளை பரிசோதித்தால், வழக்கு ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணம், சிலர் நீதிமன்றங்களில் எதிர்பார்த்த பிணை கிடைத்த காரணம் என்பன மிகவும் தெளிவாக தெரியவரும் எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.