அரசாங்கத்தை எச்சரிக்கும் கீழ் நாட்டு தோட்டத்தொழிலாளர் சங்கம்

Report Print Steephen Steephen in அரசியல்

தமது நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கவில்லை என்றால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்காது புறக்கணிக்க போவதாக தோட்டத் தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பிரதான வேட்பாளர்களில் ஒருவர் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்குவதாக கூறியதாகவும், மற்றுமொரு வேட்பாளர் 1500 ரூபாய் அதிகரிப்பதாக வாக்குறுதி வழங்கியதாக கீழ் நாட்டு தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ருவான் கால்லகே தெரிவித்துள்ளார்.

அத்தியவசிய உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு உட்பட சில காரணங்களால் தோட்டத் தொழிலாளர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர். அத்துடன் இம்மாதம் தைப்பொங்கல் பண்டிகையும் வருகிறது.

கடந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியின் வெற்றிக்காக பாடுபட்டதாகவும், இலட்சக்கணக்கான கீழ் நாட்டு தோட்ட தொழிலாளர்கள் வாக்களித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் அதிகரிப்பதாக கூறிய ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்காவிட்டால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்காது புறக்கணிக்க போவதாகவும் கால்லகே மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மலையக பிரதேசங்களை தவிர, தென் பகுதியில் கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளை தொகுதி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, காலி மாவட்டங்களிலும் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்கள் இருப்பதுடன் அவற்றிலும் தமிழ் மக்களே அதிகளவில் தொழில் புரிந்து வருகின்றனர்.