முன்னாள் ஜனாதிபதியை சந்தித்த ஈரான் தூதுவர்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கைக்கான ஈரான் தூதுவர் மொஹமட் சயரி அமீரானி இன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும் ஈரான் தூதுவர் அதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, தனது பதவிக்காலத்தில் இலங்கையின் ஜனாதிபதி என்ற வகையில் தனக்கு வழங்கிய ஒத்துழைப்பு வழங்கியமைக்கு நன்றி கூறியுள்ளார்.

அத்துடன் ஈரான் தூதுவர் இலங்கையில் சேவையாற்றிய காலத்தில் இலங்கையில் செய்த சேவை மற்றும் சமூக நடவடிக்கைகளுக்காக நன்றி தெரிவித்துள்ளார்.