இன நல்லிணக்கம் எங்களிடம் இருக்கின்றது! சி.சிறீதரன்

Report Print Yathu in அரசியல்

இன நல்லிணக்கம் எங்களுக்குள் இருக்கின்றது. ஆனால் வெளியில் இருந்து வருபவர்கள் இன நல்லிணக்கம் மற்றும் மத நல்லிணக்கம் தொடர்பில் பேசுகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் உள்ள சிறுவர் இல்ல மண்டபத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கனடா கியூபெக் மாநிலத்தில் வாழும் தமிழ் சமூக ஆதரவிலும் நிதியுதவியிலும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன.

இவர்களது கடினமான உழைப்புக்கள் மூலம் கிடைக்கும் இந்த உதவிகளை பயனாளிகளாகிய நீங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்.

எல்லா மதத்தவர்களும் ஒரு இனம் என்ற அடிப்படையில் ஒன்று கூடியிருக்கின்றோம்.

இன நல்லிணக்கம் எங்களுக்குள் இருக்கின்றது. ஆனால் வெளியில் இருந்து வருபவர்கள் இங்கே இன நல்லிணக்கம் பேசுகின்றனர். தென்பகுதியில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.