ஐ.தே.கட்சியின் தலைமை குறித்து வியாழக்கிழமை இறுதி தீர்மானம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை சம்பந்தமாக எதிர்வரும் வியாழக்கிழமை இறுதி தீர்மானம் எடுக்க அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று மாலை இந்த கூட்டம் நடைபெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை குறித்து தீர்மானிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளதுடன் கட்சியின் தலைமை குறித்து வியாழக்கிழமை இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.