நாட்டில் சிறுபான்மை கட்சிகளின் தயவில் அரசாங்கம் அமைவது தவிர்க்கப்படவேண்டும்: டளஸ் அழகப்பெரும

Report Print Ajith Ajith in அரசியல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியை எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதன் மூலமே அரசியலமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ளமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள 19வது அரசியலமைப்பு திருத்தத்திலும், தேர்தல் முறையிலும் பிரச்சினைகள் உள்ளன.

இவற்றை மாற்றியமைக்க வேண்டுமெனில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்றும் மஹிந்த ராஜபக்ச செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விகிதாசார பிரதிநிதித்துவ முறை தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர் டளஸ் அழகப்பெரும,

இதன் மூலம் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் சிறிய கட்சிகளின் உதவியுடனேயே ஆட்சி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தவிர்த்து வலுவான அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டால் மாத்திரமே முன்மாதிரி திட்டங்களை மேற்கொள்ளமுடியும்.

இந்த நிலையில் சிறுபான்மைக்கட்சிகளை ஓரங்கட்டுவது என்ற நோக்கம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.