ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய தலைவராக கரு ஜயசூரிய? சஜித் தரப்பு கடும் எதிர்ப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசியக்கட்சியின் ஒரு பிரிவினர் கட்சியின் தேசிய தலைவராக கரு ஜயசூரியவை நியமித்து பொதுத்தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த யோசனை கடந்த வியாழக்கிழமை கட்சியின் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு தற்போது பங்காளிக்கட்சிகளின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் வியாழக்கிழமை கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவும் காணப்படுவார்களெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே கரு ஜயசூரியவை தேசிய தலைவராக நியமிக்கும் முனைப்பு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கு சஜித் பிரேமதாஸவின் ஆதரவு அணி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.