முஸ்லிம் அறநெறி பாடசாலைகளை பதிவு செய்ய வேண்டும்! பிரதமர்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கையில் இயங்கும் இஸ்லாமிய அறநெறி பாடசாலைகளை சமய விவகார திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவற்றில் கற்பிக்கப்படும் பாடங்களை முறைப்படுத்துமாறு முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

புத்தசாசனம், சமய விவகாரம் மற்றும் கலாசார விவகார அமைச்சின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன் இஸ்லாமிய அறநெறி பாடசாலைகளில் கற்பிக்கப்படும் பாடநெறிகளை முறையாக ஆராய்ந்து முஸ்லிம் சமய விவகார திணைக்களமும் கல்வியமைச்சும் இணைந்து சரியான பாடநெறிகனை பரிந்துரைத்து உருவாக்க வேண்டும் எனவும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

எது எப்படி இருந்தபோதிலும் கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த தரப்பினர் முஸ்லிம் அறநெறி பாடசாலைகளை மீட வேண்டும் எனவும் அவர் அடிப்படைவாத சிந்தனைகளை கற்பித்து வருவதாக குற்றம் சுமத்தி வந்தனர்.

எனினும், தற்போது பொதுஜன பெரமுனவை சேர்ந்த எவரும் இது பற்றி பேசுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers