அவுஸ்திரேலியாவில் குரல் பதிவுகளை மறைத்து வைத்திருக்கும் ரஞ்சன்

Report Print Steephen Steephen in அரசியல்

வெளியாகியுள்ள தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய குரல் பதிவுகளுக்கு மேலதிகமான பல குரல் பதிவுகள் அவுஸ்திரேலியா மற்றும் இன்னுமொரு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான நேரத்தில் அவற்றை வெளியிட போவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய குரல் பதிவுகள் சம்பந்தமாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் இது தொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு தான் கோரி உள்ளதாகவும் ஆணைக்குழு நியமிக்கப்பட்ட பின் அதில் ஆஜராகி சகல விடயங்களையும் வெளியிட போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவே தான் குரல் பதிவுகளை தன்வசம் வைத்துக் கொண்டதாகவும் திருடர்களை, ஊழல்வாதிகளை நல்லாட்சி அரசாங்கம் பாதுகாத்ததால், தான் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்காக குரல் கொடுத்ததாகவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers