சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள்! அவசரமாக கூடியுள்ள நீதி சேவைகள் ஆணைக்குழு

Report Print Steephen Steephen in அரசியல்

சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் தொடர்பான விடயங்களை கலந்துரையாட அவசரமாக நீதி சேவைகள் ஆணைக்குழு கூடியுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, உயர் நீதிமன்ற நீதியரசர்கள் புவனேக அலுவிகார, சிசிர ஆப்ரூ ஆகியோர் நீதி சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாவர்.

குரல் பதிவுகளில் சம்பந்தப்பட்டுள்ள நீதிபதிகள் தொடர்பான உரையாடல்களை ஆராய்ந்து அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.

அதில் வெளியாகும் விடயங்களின் அடிப்படையில் சட்டவிரோதமாக ஏதேனும் நடந்திருந்தால், அதற்கு எதிராக வழக்கு தொடர பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

கைப்பற்றிய குரல் பதிவுகள் அனைத்தும் அரச இரசாயன பகுப்பாய்வாளரின் பொறுப்பில் விசேட பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் பெறப்படும் மூலப் பிரதிகளை இரசாயன பகுப்பாய்வாளரின் சான்றிதழுடன் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த உத்தேசித்துள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...