சாதியம் தொடர்பில் பேசவே இல்லை! மறுத்தார் கூட்டமைப்பு உறுப்பினர்

Report Print Dias Dias in அரசியல்

யாழ். மாநகரசபையில் நடந்த விடயம் சம்பந்தமாக தவறாக விமர்சிக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினரான ப.தர்சானந்த் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

எந்தவொரு உள்நோக்கமும் இன்றி என்னுடைய முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்ட சிறிய விடயத்தை கொண்டு தவறான விமர்சனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிகின்றேன்.

அதில் நான் தனி நபரையோ, சாதியையோ, யாரையுமோ குறிப்பிட்டு போடவில்லை. மூதுரையில் ஔவையாரால் கூறப்பட்டிருந்த ஒரு பாட்டினை தான் நான் கூறியிருந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்று, நான்கு சபை அமர்வுகளில் ஒரு குறிப்பிட்ட உறுப்பினர் வந்திருந்து கொண்டு சபையை குழப்பியது மட்டுமில்லாமல், சபை மாண்புகளை மீறியது மட்டுமில்லாமல் தனிப்பட்ட ரீதியில் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டிருந்தார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers