இரு புதிய பல்கலைக்கழகங்கள்! அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

Report Print Ajith Ajith in அரசியல்

நுவரெலியாவிலும் தியத்தலாவையிலும் இரண்டு பல்கலைக்கழகங்களை அமைக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு பல்கலைக்கழகங்களும் முழுமையான கற்கை நெறிகளை கொண்ட பல்கலைக்கழகங்களாக அமைக்கப்படவுள்ளன.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இது தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில் நுவரெலிய சந்ததென்ன என்ற இடத்தில் ஒரு பல்கலைக்கழகத்தையும் தியத்தலாவையில் ஒரு பல்கலைக்கழகத்தையும் அமைக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குறிப்பிட்டார்.

நுவரெலியாவில் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான இடத்திலும் தியத்தலாவையில் காணி மதிப்பீட்டு திணைக்கள இடத்திலும் இந்த இரண்டு பல்கலைக்கழகங்களும் அமையவுள்ளன.

Latest Offers