ஜனாதிபதியின் சீன விஜயத்திற்கான திகதி உறுதிப்படுத்தவில்லை!

Report Print Ajith Ajith in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சீன பயணத்துக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த திகதி தொடர்பில் தற்போது பேச்சுக்கள் நடத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஜனாதிபதியின் சீன பயணம் ஜனவரி 14ம் திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் பின்னர் அது பிற்போடப்பட்டது.

மஹிந்த ராஜபக்ச காலத்தில் சீனாவுடன் இலங்கை நெருங்கிய நட்பைக் கொண்டிருந்தது. இந்த நிலையில் கோட்டாபயவின் அரசாங்கத்திலும் இந்த உறவை நீடிக்க சீனா எதிர்பார்க்கிறது.

சீனாவிடம் இருந்து இலங்கை கடந்த வருடங்களில் 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அபிவிருத்திக் கடன்களை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers