கோட்டாபய - மகிந்த - மைத்திரி - ரணில் - சஜித் ஒரே மேசையில்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஒரே மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிமின் மகளது திருமண வைபவத்திலேயே இவர்கள் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை அரசியல் சார்ந்ததாக இருந்தது என கூறப்படுகிறது.

திருமணத்தில் கலந்து கொண்ட வேறு சிலர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் தொடர்பாக கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.

இந்த குரல் பதிவு பிரச்சினை தொடர்ந்தும் நீடித்தால், குடும்ப பிரச்சினைகள் ஏற்படக்கூடும் எனவும், இதன் பின் அரசாங்கத்திற்கு குடும்ப பிரச்சினைகளை தீர்க்க நேரிடும் எனவும் ரணில் விக்ரமசிங்க இதன் போது சிரித்தவாறு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers