சஜித்தின் புதிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சஜின்வாஸ் குணவர்தன?

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஆரம்பிக்கப்பட உள்ள புதிய அரசியல் முன்னணியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன நியமிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

சஜின் வாஸ் குணவர்தன கடந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ராஜபக்ச குடும்பத்திற்கு மிக நெருக்கமான நபராக செயற்பட்டார்.

அத்துடன் அவர் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார். அந்த காலத்தில் அவருக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதுடன் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததுடன் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

எவ்வாறாயினும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜின்வாஸ், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக பிரசாரங்களை மேற்கொண்டு வந்தார்.

இதனிடையே சஜித் பிரேமதாசவின் புதிய கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவராக சுஜீவ சேனசிங்கவும், கம்பஹா மாவட்ட தலைவராக ஹரின் பெர்னாண்டோவும், களுத்துறை மாவட்ட தலைவராக அஜித் பீ. பெரேராவும் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் மூவரும் இந்த மாவட்டங்களில் தலா மூன்று இலட்சம் வாக்குகளை பெற்றுக்கொள்வதாக வாக்குறுதியளித்துள்ளனர்.

Latest Offers

loading...