நாட்டில் நடக்கும் முறைகேடுகளை ரஞ்சன் தெளிவாக வெளிக்கொண்டு வந்துள்ளார்

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் ஊடாக பகிரங்கமாகி இருக்கும் குற்றச்செயல்களை எப்படி வெளிக்கொண்டு வந்தார் என்பதை ஆராயாமல், அந்த குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ரஞ்சன் ராமநாயக்க பல வழிமுறைகளை கையாண்டு ஊழல், மோசடிகளை வெளிக்கொண்டு வந்துள்ளார்.

இவற்றை வெளிக்கொண்டு வந்தமைக்காக அவரை விமர்சிப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

நாடாளுமன்றத்தில், நீதித்துறையில் எந்த இடமாக இருக்கலாம், வேறு அமைப்புகளாக இருக்கலாம் நாட்டில் நடக்கும் முறைகேடுகளை மிக தெளிவாக நாட்டுக்கு வெளி கொண்டு வந்துள்ளார்.

முறைகேடுகள் நடந்த இடங்களை தேடிப்பார்த்து, மிகவும் சூட்சுமான முறையில் மக்களுக்கு வெளி கொண்டு வர ரஞ்சன் ராமநாயக்கவினால் முடிந்துள்ளது.

தவறுகளை வெளி கொண்டு வர கையாண்ட விதம் பற்றி தேடிப்பார்ப்பதை விட தவறுகளை சுட்டிக்காட்டிய பின் அதனை சரி செய்வது எப்படி என்பதை தேடிப்பார்க்க வேண்டியதே முக்கியமானது.

உண்மைகளை வெளிக்கொண்டு வந்தமைக்காக ரஞ்சன் ராமநாயக்கவை பார்த்து நாய்களை போல் குரைப்பது கவலைக்குரிய நிலைமை என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...